மேல்நாரியப்பனுார் சுற்று வட்டார பகுதிகளில் பப்பாளி பழ சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார், தென்பொன்பரப்பி, ராயப்பனுார் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் பப்பாளி பழத்திற்கு அதிக விலை கிடைப்பதால் 15 ஏக்கருக்கு மேல் பப்பாளி செடியை நடவு செய்துள்ளனர்.இது குறித்து பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயி ராஜா கூறியதாவது:பப்பாளி 2 ஆண்டு கால பயிராகும். இது ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலங்கள் பப்பாளி சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை. நடவு பருவத்தில் அதிக மழை இல்லாமல் பயிர் செய்தால், செடி நன்றாக செழித்து வளரும். மேலும், ஒரு ஏக்கருக்கு 900 செடிகள் வரை நடவு செய்து, ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் 2 அடி இடைவெளியில் பப்பாளி செடியை பயிர் செய்ய வேண்டும்.இது 5 அடி வரை உயரக்கூடியது. மேலும் ஒரு மரத்திற்கு 60 முதல் 80 காய்கள் வரை காய்க்கும் தன்மையுடையதாகவும், ஒரு பப்பாளி அதிகபட்சமாக 2 கிலோ வரை எடை உள்ளவையாக இருக்கும். இதன் விலை ஒரு கிலோ 6 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பப்பாளி பழ சாகுபடி பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக் கூடியது. எனினும் களிமண் பூமியில் சாகுபடி செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.மேலும் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் தண்ணீர் தேவை குறைவான அளவே தேவைப்படுகிறது. இங்கு விளையும் பப்பாளி சென்னை, கோவை, மதுரை போன்ற நகரப்பகுதிகளுக்கு, மொத்த வியாபாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
Must Read
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்
ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
...
சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
...
- Advertisement -
Latest News
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -
More Articles Like This
விவசாயிகள் போராட்டத்திற்கு அணுமதிக்க மாட்டோம் : போலீஸ் கமிஷனர்..
விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று போலீஸ் கமிஷனர் அலோக்குமார் வர்மா கூறியுள்ளார்.
...
புதிய வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்?
பஞ்சாப்பில் ஒப்பந்த விவசாயம் நடைமுறையில் இருக்கும் நிலையில் புதிய வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன் என்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
...
விவசாயிகள் போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சரத்பவார் பங்கேற்க முடிவு!!
மும்பையில் 25-ந் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சரத்பவார் பங்கேற்கிறார்கள்.
...
விவசாயிகளுடனான 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு….
விவசாயிகளுடன் இன்று நடைபெறவிருந்த 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
...