சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் முன்பதிவு துவங்கியது இந்தியாவில்!!

கேலக்ஸி பட்ஸ்
கேலக்ஸி பட்ஸ்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கேலக்ஸி பட்ஸ்
கேலக்ஸி பட்ஸ்
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் 2021 கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவங்கியதை தொடர்ந்து தற்சமயம் இந்த வயர்லெஸ் இயர்போனிற்கான முன்பதிவு துவங்கி உள்ளது.
இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் விலை ரூ. 15,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்போனுக்கான முன்பதிவு சாம்சங் பிரத்யேக ஸ்டோர்கள், சில்லறை விற்பனை மையங்கள், சாம்சங் வலைதளம் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்களில் நடைபெறுகிறது. இதன் விற்பனை ஜனவரி 29 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
 கேலக்ஸி பட்ஸ் ப்ரோ
புதிய கேலக்ஸி பட்ஸ் ப்ரோ முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ. 3699 விலையுள்ள வயர்லெஸ் பவர்பேங்க் யு1200 மாடலை ரூ. 499 விலைக்கு பெற முடியும். புதிய சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ இயர்போன் பிளாக், சில்வர் மற்றும் வைலட் நிறங்களில் கிடைக்கிறது.
இந்த இயர்பட்ஸ் டைனமிக், பேலன்ஸ்டு சவுண்ட் வழங்க ஏதுவாக இருவழி ஸ்பீக்கர் சிஸ்டம் கொண்டிருக்கிறது. மேலும் இதன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் வசதி சிறப்பாக செயல்பட இது உதவுகிறது. இந்த இயர்பட்ஸ் கேலக்ஸி ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களுடன் எளிதில் இணைந்து கொள்ளும் வசதி கொண்டுள்ளது.
கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் IPX7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஸ்மார்ட்திங்ஸ் சேவை மூலம் எளிதில் இயர்பட்களை கண்டுபிடிக்கும் வசதி உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது.