சசிகலா நலமாக இருக்கிறார் அச்சம் கொள்ள தேவை இல்லை : டிடிவி!

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது- டிடிவி தினகரன்

                                                 டிடிவி தினகரன்

சசிகலா சிகிச்சை பெறும் பெங்களூரு சிவாஜி நகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. ஆக்சிஜன் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சசிகலா நலமாக இருக்கிறார். அச்சம் கொள்ள தேவை இல்லை. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் சசிகலாவுக்கு ஸ்கேன் சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சசிகலா நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.