சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக மருத்துவமனை தகவல்..

சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்

                                                                            சசிகலா
மூச்சுத்திணறலால் பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி ஆனது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை கூறியிருப்பதாவது:

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது.

சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சனைகளும் சசிகலாவுக்கு உள்ளன.

சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.