26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

சங்கராபுரத்தில் விதிகளை கடைபிடிக்காத கடைகளால் தொற்று அதிகரிப்பு!

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...

சங்கராபுரம் நகரில் உள்ள பெரும்பாலான கடைகளில் அரசின் விதிமுறைகளை முறையாக கடை பிடிக்காமல் சமூக இடைவெளியின்றி கூட்டமாக நின்று பொருட்கள் வாங்குவதால் தொற்று அதிகரித்து வருகிறது.சங்கராபுரம் நகரில் பூட்டை ரோடு, பொய்குனம் ரோடு, கடை வீதி, காலனி, மேட்டு தெரு, கள்ளக்குறிச்சி ரோடு, குளத்துப்பாதை தெரு என நகரில் உள்ள அனைத்து பகுதியிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.மளிகைக் கடை, காய்கறி கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்பவர்கள் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக நின்று பொருட்களை வாங்க முண்டியடித்து நிற்கின்றனர். இதில் பெரும்பாலானோர் முகக் கவசம் அணியாமல் வருகின்றனர்.நகரில் இதுவரை 41 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்தார். 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 18 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர்.சங்கராபுரம் பகுதியில் நாளுக்கு நாள் வேகமாக பரவிவரும் கொரோனாதொற்றுக்கு மக்கள் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்து வருவதே காரணமாகும். சங்கராபுரம் நகரில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்றை குறைக்க முடியும்.

Sangai News 23.07.2020
Sangai News 23.07.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This