26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

கோடை உழவு பணி தீவிரம்!!!

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...

திருக்கோவிலூர் பகுதியில் கோடை மழையால் விவசாயிகள் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக திருக்கோவிலூர் பகுதியில் பெய்து வரும் கோடை மழை மானாவாரி நிலங்களில் உழவு மேற்கொள்வதற்கு வசதியான சூழலை ஏற்படுத்தியுள்ளது.திருக்கோவிலூர் வட்டார வேளாண் அலுவலகத்திற்கு உட்பட்ட ஆவியூர், எல்ராம்பட்டு, எரவலம், எடையூர் திருப்பாலப்பந்தல், ஜி.அரியூர் ஆகிய கிராமங்களில் 600 ஏக்கர் மானாவாரி நிலங்களில் கோடை உழவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1,750 ரூபாயை தமிழ்நாடு அரசு மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தினை எரவலம் கிராமத்தில் வேளாண் இணை இயக்குனர் கென்னடிஜெபக்குமார் துவக்கி வைத்தார்.அப்பொழுது அவர் விவசாயிகளிடம் கூறும்பொழுது, திருக்கோவிலூர் வட்டாரத்தில் 4 ஆயிரத்து 500 ஏக்கர் கரும்பு, 17,500 ஏக்கர் உளுந்து மற்றும் மணிலா பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதி முழுவதும் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும். கோடை உழவு செய்வதன் மூலம் களைக்கட்டுப்பாடு, பூச்சிகளின் கூண்டு புழுக்களை அழித்தல், நோய் கட்டுப்பாடு, மழைநீர் சேகரிப்பு, மண் வளம் மேம்பாடு போன்ற பயன்கள் ஏற்படும்’ எனக் கூறினார்.அரசு மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கு 50 சதவீத மானியத்தில் கம்பு, உளுந்து மற்றும் மணிலா விதைகள்

Farmer News 30.05.2020
Farmer News 30.05.2020

வழங்குவதற்கு வேளாண்மை அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதைப் பெற்று விவசாயிகள் பயன் பெற வேண்டும் என வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This