உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்துள்ளன. கொள்ளுவை நம் அன்றாட உனவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும்.
கொள்ளுப்பயிறு – ஒரு கப்,
முட்டைக்கோஸ் – சிறிய துண்டு
வெங்காயம் – 1,
கேரட் – 1,
குடைமிளகாய் – பாதி
கரம் மசாலா – அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி – சிறிதளவு
சோம்புப்பொடி – ஒருடீஸ்பூன்.
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்.
செய்முறை
முட்டைக்கோஸ், வெங்காயம், குடைமிளகாய், கேரட், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொள்ளுப்பயிறை ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்பு தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்து கொள்ளவும்.
அந்தக் கலவையுடன் முட்டைக்கோஸ், வெங்காயம், குடைமிளகாய், கேரட், ப.மிளகாய், கொத்தமல்லி, கரம் மசாலா, உப்பு, சோம்புப்பொடி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை விருப்பமாக வடிவில் தட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்த கட்லெட்டுகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.