கொலம்பியா தனது 28-வது பயணத்தை தொடங்கியது!!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, பல்வேறு விண்கலங்களில் மனிதர்களை அனுப்பி சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் முதல் முறையாக விண்ணுக்குச் சென்று பத்திரமாக பூமிக்குத் திரும்பிய பெருமையை கொலம்பியா விண்கலம் பெற்றுள்ளது.
 
இந்த கொலம்பியா தனது 28-வது பயணத்தை 2003ம் ஆண்டு இதே நாளில் (ஜன.16) தனது பயணத்தைத் தொடங்கியது. இதில் ஒரு பெண் உட்பட 7 விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர். இந்த பயணமே கொலம்பியாவின் கடைசி பயணமாகவும் அமைந்துவிட்டது.
இந்த விண்வெளி ஓடம், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, 2003ம் ஆண்டு பிப்ரவரி 1-ம்தேதி பூமிக்குத் திரும்பும்போது டெக்சாஸ் நகருக்கு மேல் வெடித்துச் சிதறியது. விண்வெளி ஓடத்தில் இருந்த அனைவரும் இறந்தனர்.
கொலம்பியா விண்கலம் மொத்தம் 300.74 நாட்கள் விண்ணில் கழித்துள்ளது. 4,808 சுற்றுக்களை முடித்ததுடன் 125,204,911 மைல்கள் மொத்தமாகப் பயணித்தது குறிப்பிடத்தக்கது.