கொரோனா தடுப்பூசி போடப்பட்ட யாருக்கும் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை:நாளை முதல் முழுவீச்சில் தடுப்பூசி பணி- அமைச்சர் விஜயபாஸ்கர்!!

முதல் நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி: நாளை முதல் முழுவீச்சில் தடுப்பூசி பணி- அமைச்சர் விஜயபாஸ்கர்

                                      அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் முதல் நாளில் 2,783 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. விருப்பம் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இது மருத்துவ துறைக்கும், இந்தியாவுக்கும் மிகப்பெரிய வெற்றி.

தமிழகத்தில் 166 மையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளை முதல் முழுவீச்சில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும். சென்னையில் தடுப்பூசி மையங்களை அதிகரிப்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் 10 பிரபல மருத்துவர்கள், தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.