கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை
கரியாலுாரில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் இரு தினங்கள் கோடை விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கோடை விழாவின்போது அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதுடன், பல்வேறு அரசுத்துறைகளின் பணிவிளக்க கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்.
இதில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட அரசு உயர் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்பதால் கல்வராயன்மலை கோலாகலம் பெறுவதுடன் மாவட்டத்தின் அனைத்து பகுதி மக்களும் இதனை காண வருவது வாடிக்கை.தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் துவங்கப்பட்ட பிறகு கல்வராயன்மலையில் நடக்கும் கோடை விழா கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக இவ்வாண்டு நடக்குமா என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.கல்வராயன்மலை கோடை விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், அரசுத்துறைகளின் பன்முக பணிவிளக்க கண்காட்சிகளுடன், மலைவாழ் மக்களுக்கான அரசின் நலத்திட்ட உதவிகளும் ஏராளமாக வழங்கப்பட்டு வருகிறது.