திருக்கோவிலுாரில் கொரோனா அச்சமின்றி குவியும் கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளது.திருக்கோவிலுாரில் துவக்க காலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பசுமை மண்டலமாக இருந்தது. தற்போது திருக்கோவிலுார் கொரோனாவின் ஹாட் ஸ்பாட்டாக மாறி விட்டது. நகரத்தில் மட்டும் 200 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கும் சூழலில், மாவட்டத்திலேயே அதிக உயிரிழப்பு ஏற்பட்ட பகுதியாக 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.இந்த சூழலில் வியாபாரிகளும், பொதுமக்களும் தாமாக முன் வந்து ஒரு வாரம் முழு அடைப்பு நடத்தினர். இந்நிலையில் நகரத்தில் குறிப்பாக கடை வீதி, வடக்கு வீதிகளில் கூட்டம் அலை மோதுவது வாடிக்கையாகி விட்டது.கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி இருந்த போதிலும் கண்காணிக்க யாரும் இல்லாததால் வடக்கு வீதியில் நேற்று மதியம் நடந்து செல்வதற்குகூட முடியாத அளவிற்கு கூட்ட நெரிசல் காணப்பட்டது.அதிக நோய் தொற்று, உயிரிழப்பு என மாவட்டத்தில் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கும் நகரில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலால் மேலும் தொற்று பரவி அபாய கட்டத்திற்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.நோயின் தீவிரத்தை கண்கூடாக பார்த்த போதும், விழிப்புணர்வு அடையாத மக்களை ஒழுங்குபடுத்த வேண்டியது அரசின் கடமை. இதற்காக தனி மனித இடைவெளியை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை, வாகன போக்குவரத்தில் கட்டுப்பாடு, ஒருவழிப் பாதை போன்ற நடவடிக்கைகளை அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
Updated:
குவியும் கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம்
Must Read
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
2021 சுசுகி ஹயபுசா!!
2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
...
2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா ?
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
...
- Advertisement -
Latest News
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
More Articles Like This
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...
கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று இல்லை!!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று...