கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு கரும்பு பயிரை காப்பாற்ற விவசாயிகள் தவித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. பராமரிப்பு வேலைகள் எளிதாகவும் ஆண்டுக்கு ஒருமுறை நிகரலாபம் ஈட்டி தருவதால் இதனை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதன் காரணத்தால் 3 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் 2 தனியார் சர்க்கரை ஆலைகள் மாவட்டத்தில் அமைந்துள்ளது.கரும்பு ஓராண்டில் வளர்ந்து பலன் தரும் பயிராகும். இதனால் ஆண்டுமுழுவதும் இதற்கு போதிய தண்ணீர் பாய்ச்சி பராமரிப்பது அவசியமாகும்.கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழையின்றி கரும்பு பயிர் எதிர்பார்த்த மகசூல் கொடுக்கவில்லை.தனியார் ஆலைகளும் கரும்புக்கு உரிய விலை கொடுக்காமலும், கொள்முதல் பணத்தை குறிப்பிட்ட நேரத்தில் தராமலும் அலைகழித்து வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இருப்பினும் மழை ஏமாற்றுவதால் நெல் சாகுபடிக்கு மாற முடியாமல் வேறு வழியின்றி கரும்பை தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர்.கடந்த இரு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து பெரும்பாலான நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு விட்டது.இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிரடியாக குறைந்துள்ளது.பாசனக் கிணறுகளில் தண்ணீர் சுரக்காமல் கரும்புக்கு நீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வேறு வழியின்றி விவசாயிகள் சிலர் கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதேபோல் கிணற்றில் சைடு போர் அமைத்து தண்ணீர் எடுக்க முயன்று வருகின்றனர்.நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இம்முயற்சிகள் அனைத்தும் எதிர்பார்த்த பலனை தராததால் ஏமாற்றத்தில் உள்ளனர்.இதன் காரணமாக கரும்பு பயிரின் சோலைகள் வாடிய நிலையில் தண்ணீரின்றி பரிதாபமாக காட்சியளிக்கிறது.இதே நிலை தொடர்ந்தால் கரும்பு பயிர் கருகி மகசூல் கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகும்.இத்தருணத்தில் மழை பெய்து மண்ணின் ஈரத்தன்மை அதிகரித்தால் மட்டுமே கரும்பு பயிர் கருகுவதில் இருந்து காப்பாற்ற முடியும்.தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வரும் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் மழையை எதிர்பார்த்து தவிப்புடன் காத்திருக்கின்றனர்
Must Read
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
2021 சுசுகி ஹயபுசா!!
2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
...
2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா ?
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
...
Previous article15 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்
Next articleவெண்டக்காய் பயிரிடுவதால் விவசாயீகள் ஆர்வம் !
- Advertisement -
Latest News
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
More Articles Like This
விவசாயிகள் போராட்டத்திற்கு அணுமதிக்க மாட்டோம் : போலீஸ் கமிஷனர்..
விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று போலீஸ் கமிஷனர் அலோக்குமார் வர்மா கூறியுள்ளார்.
...
புதிய வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்?
பஞ்சாப்பில் ஒப்பந்த விவசாயம் நடைமுறையில் இருக்கும் நிலையில் புதிய வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன் என்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
...
விவசாயிகள் போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சரத்பவார் பங்கேற்க முடிவு!!
மும்பையில் 25-ந் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சரத்பவார் பங்கேற்கிறார்கள்.
...
விவசாயிகளுடனான 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு….
விவசாயிகளுடன் இன்று நடைபெறவிருந்த 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
...