கால்சியம் சத்து நிறைந்த சாலட் !!

கால்சியம் சத்து நிறைந்த வெள்ளரிக்காய் தக்காளி சாலட்

                                                            வெள்ளரிக்காய் தக்காளி சாலட்
தேவையான பொருட்கள் :

பழுத்த பெங்களூர் தக்காளி – 3,

பெரிய வெங்காயம் – 1,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
வெள்ளரிக்காய் – 1/2 துண்டு,

செய்முறை :

தக்காளி, வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: சாலட் செய்ய நாட்டுத்தக்காளி, ஹெப்பிரிட் தக்காளியைப் பயன்படுத்தாமல், பெங்களூர் தக்காளியை பயன்படுத்தினால் சாலட் புளிக்காது.