26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

கள்ளசாராயமாகும் கள்ளக்குறிச்சி ! அதிகரிக்கும் கைதுகள் !!

Must Read

வயிற்று வலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை …

ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.            ...

6 பேர் குண்டர் சட்டத்தில் கைது …

தஞ்சை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், குண்டர் சட்டத்தில் 6 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.      ...

காவல் நிலையம் அருகிலே வாலிபர் வெட்டிக் கொலை …

மானாமதுரையில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரமாக நடந்த கொலை சம்பவம் பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.      ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி க்கு அருகே உள்ளது கல்வராயன் மலை .இக்கல்வராயன் மலையில் 175 க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது.இந்த மலை கிராமங்களில் உள்ள காப்பு காடு பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சி வருவது வாடிக்கையாக உள்ளது.இருப்பினும் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவினால் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மது பான பார்கள் மூடபட்டது.இதனால் கள்ளதனமான மதுபாட்டில்கள் விற்ப்பனை இல்லாமல் சாராயத்தை தேடி அலைகின்றனர் மது பிரியர்கள் .கல்வராயன் மலையில் அதிகபடியாக சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் ஊரடங்களில் சாராய விற்ப்பனையை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் கூடுதல் கவனத்தை செலுத்தினர்.கல்வராயன்மலை பகுதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் உத்தரவின் பேரில் டி எஸ் பி தலைமையில் 4 ஆய்வாளர்கள் 64 காவலர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர் அதில் சாராய ஊரல்கள் சுமார் 21 ஆயிரம் லிட்டரை அழித்தனர்.இதில் 16 பேரை முதற்கட்டமாக கைது செய்துள்ளனர்.மேலும் கல்வராயன் மலை பகுதிகளை போலிசார் தீவிரமாக கண்காணித்து சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்து வருகின்றனர் .ஆனால் கல்வராயன் மலையில் அதிகபடியான கிராமங்கள் கொண்டதால் காவல் துறையினர் செல்ல முடியாத இடங்களில் சாராயம் காய்ச்சி விற்ப்பனைகாக லாரி டியூப் களில் வைத்து எடுத்து வருகின்றனர்.144 தடை உத்தரவால் மதுபான பற்றாகுறையை கருத்தில் கொண்டு சாராய விற்ப்பனைக்காக களத்தில் இறங்கியுள்ளனர் சில இளைஞர்கள் கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கல்வராயன்மலை பகுதிகளில் தொடர்பு கொண்டு சாராயத்தை கடத்தி வருகின்றனர்.இதனை பாக்கெட் செய்து கள்ளக்குறிச்சி பகுதியில் விற்ப்பனை செய்து வருகின்றனர்.ஊரடங்குஉத்தரவால் ஒரு லிட்டர் சாராயத்தின் விலை 1800 ஆக விற்ப்பனை செய்வதால் பணத்திற்க்கு ஆசைபட்டு போலிசாரிடம் சிக்கி வாழ்க்கையை துலைக்கின்றனர் பலர்.கள்ளக்குறிச்சி பகுதியில் தொடர்ந்து சாரயம் விற்ப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்வராயன் மலை பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை மேற்கொள்ள மாவட்ட காவல் துணை கண்காணிப்பலர் உத்தரவிட்டதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி போலிசார் மூன்று இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர் அப்போது இரு சக்கர வாகனங்களில் கள்ளக்குறிச்சி பகுதிகளில் சாராயம் விற்ப்பனை செய்து வந்தவர்கள் உட்பட கிராமங்களுக்கு கடத்தி சென்றவர்கள் வரையில் என 7 பேரை அதிரடியாக கைது செய்தனர் மேலும் அவர்களிடத்தில் விசாரணை நடத்திய போது  கள்ளக்குறிச்சி பகுதியில் இரு சக்கர வாகனம் மூலம் சாராய விற்ப்பனை செய்து வருவதாக வும் தெரியவந்தது.இதனால் மூன்று இருசக்கர வாகனங்களை போலிசார் பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு காலத்தில் 40 ஆயிரம் லிட்டர் சாராய ஊரல்களும் 3000 லிட்டர் சாராய த்தையும் பறிமுதல் செய்து 10 இரு சக்கர வாகனம் மற்றும் கார் உட்பட அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலிசார் சாராய தடுப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டும வரும் நிலையில் கள்ள சாராயத்தை விற்ப்பனை செய்வோர் அல்லது காய்ச்சுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என கிராம பகுதிகளில் சென்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

வயிற்று வலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை …

ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.            ...
- Advertisement -

More Articles Like This