கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உறுதியானதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெய
சந்திரன் இன்று கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.
காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் மற்றவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.