கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கினை மீறியதாக 4,851 பேரினை கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல், மே மாதம் 17 ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும் எனவும், காரணமின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 48 நாட்களில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4,691 வழக்குகளை போலீசார் பதிந்துள்ளனர். அதில் 4,851 பேர் கைது செய்யப்பட்டு, போலீஸ் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 3,173 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.