கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 734 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, நேற்று மாலையே விஜர்சனம் செய்யப்பட்டது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது. இதையொட்டி தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, இந்து முன்னணி சார்பில் 3 அடி மற்றும் அதற்கும் குறைவான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் தங்களின் வீடுகளில் வெளியே வைத்து, பூஜை செய்து வழிபட்டனர்.கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 160, சின்னசேலம் ஒன்றியத்தில் 220, சங்கராபுரம் ஒன்றியத்தில் 92, திருக்கோவிலுார் ஒன்றியத்தில் 105, என மாவட்டம் முழுவதும் மொத்தம் 734 இடங்களில் விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர் சிலைகள் நேற்று மாலை நீர்நிலைகளுக்குக் கொண்டு சென்று கரைக்கப்பட்டன.ஏற்பாடுகளை, இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மாவட்ட செயலாளர்கள் சக்திவேல், சுரேஷ், நகர செயலாளர்கள் வீரமணி, ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருண், பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.