26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 89 பேருக்கு தொற்று உறுதி

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...

கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் 2,299 பேர் பாதிக்கப்பட்டிருந் தனர். இவர்களில் 1713 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 15 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியா கினர். அது பற்றிய விவரம் வருமாறு:-

கள்ளக்குறிச்சியை சேர்ந்த 60 வயதுடைய ஆண் மற்றும் கள்ளக்குறிச்சி அருகே கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்த 62 வயதுடைய விவசாயிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக தனித் தனியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவர்களின் உமிழ்நீர் சேகரிக்கப்பட்டு பரிசோத னைக்கு அனுப்பப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கோயம் புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப் பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 60 வயதுடைய ஆண் நேற்று முன்தினமும், 62 வயதுடைய விவசாயி நேற்றும் இறந்தனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பலியான வர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

Corona Update Kallai 21.07.2020
Corona Update Kallai 21.07.2020

இந்த நிலையில் நேற்று 320 பேரின் பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் 89 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் சிகிச் சைக்காக மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,299-ல் இருந்து 2,388 ஆக உயர்ந் துள்ளது. கடந்த 2 வாரத்தில் மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This