26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த கூறி பஸ்கள் தடுத்து நிறுத்தம்

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் மாதம் 25 -ந் தேதி முதல் பஸ் போக்குவரத்து தமிழகத்தில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் பஸ்களை இயக்கலாம் என அரசு உத்தரவிட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முதல் மீண்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

 

Bus News 02.06.2020
Bus News 02.06.2020

இதில் கள்ளக்குறிச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விழுப்புரம், திருக்கோவிலூர், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் புறப்பட்டு சென்றன. அந்த பஸ்கள் கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடியில் சென்றபோது, அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள், பஸ்சை மறித்தனர். பின்னர் அவர்கள், பஸ் டிரைவர்களிடம் சுங்க கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.

அதற்கு அவர்கள், எங்களிடம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிடவில்லை. தமிழக அரசின் உத்தரவின் பேரில்தான் பஸ்களை இயக்குகிறோம். எனவே சுங்க கட்டணம் செலுத்த மாட்டோம் என கூறியுள்ளனர். அதற்கு ஊழியர்கள், சுங்க கட்டணம் செலுத்தினால் மட்டுமே பஸ்களை செல்ல அனுமதிக்க முடியும் என கூறியுள்ளனர். இதனால் சுங்கச்சாவடியில் அரசு பஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

இந்த பஸ்களின் இடையே அந்த வழியாக வந்த கார், லாரி உள்ளிட்ட வாகனங்களும் சிக்கிக்கொண்டன. இதனால் கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடியில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பஸ் டிரைவர்கள், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டதை அடுத்து அரசு பஸ்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்றன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This