கள்ளக்குறிச்சி கமிட்டிக்கு நேற்று விற்பனைக்கு வந்த 409 மூட்டை விவசாய விளைபொருட்கள் 11.57 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக கச்சிராயபாளையம் சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வருகின்றனர்.நேற்று, மக்காச்சோளம் 300 மூட்டைகள் வந்தன. மேலும், 25 மூட்டை வேர்க்கடலை, 80 மூட்டை எள், 3 மூட்டை கம்பு, ஒரு மூட்டை சாமை, 13 மூட்டை சிவப்பு சோளம் என மொத்தம் 409 மூட்டைகள் வந்தன.105 விவசாயிகள் கொண்டு வந்த 409 மூட்டை தானியங்கள் 11 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.