ள்ளக்குறிச்சியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு, கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 24ம் தேதி துவங்குகிறது.துறை வாரியாக கலந்தாய்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் விபரம்:தமிழ், ஆங்கிலம் 24ம் தேதி காலை 10:00 மணி; வணிகவியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் 25ம் தேதி காலை 10:00 மணி; வேதியியல், இயற்பியல் 26ம் தேதி காலை 10:00 மணிக்கும் கலந்தாய்வு நடக்கிறது. தொலைபேசியில் அழைப்பு கிடைத்தவர்கள் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் 10, 12ம் வகுப்பு மதிப்பெண், ஜாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் 3 புகைப்படம் எடுத்து வர வேண்டும். கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும்.கல்வி கட்டணமாக பி.ஏ., தமிழ், ஆங்கிலம் மற்றும் பி.காம்., 2,230 ரூபாய், பி.எஸ்சி., கணிதம், வேதியியல், இயற்பியல் 2,250 ரூபாய், கணினி அறிவியல் 1,650 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.இத்தகவலை கல்லுாரி முதல்வர் மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.