26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

கள்ளக்குறிச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை!!!

Must Read

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...

ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்    ...

ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம் !!

எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.    ...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 45 காய்ச்சல் முகாம்கள் நடத்தபட்டு வருகிறது இதுவரையில் 357 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளது.இதுவரையில் நடைபெற்ற 357 காய்ச்சல் முகாம்களில் மொத்தம் 13450 பேருக்கு பரிசோதனை செய்யபட்டுள்ளது இவர்களில் 4501பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சட்டபேரவையில் கள்ளக்குறிச்சி யை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவித்துள்ளேன் அது மட்டுமின்றி மாவட்டத்தை துவக்கி வைக்க நேரடியாக வந்தேன் .அதே போல மாவட்டம் துவக்கி வைக்கபட்ட 6 மாதத்திலேயே சட்டதுறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அமைக்க கோரிக்கை வைத்தனர்.அதனை ஏற்று மத்திய மாநில அரசுகள் சேர்ந்து 382 கோடி ரூபாயில் மருத்துவ கல்லூரியுடனான மருத்துவமனைக்கான அனுமதியளித்து அடிக்கல் நாட்டபட்டது.சிறுவங்கூர் கிராமத்தில் இம்மருத்துவமனை துவங்கியுள்ளது.மாவட்டம் துவங்கபட்டு 6 மாதத்திலேயே இப்பகுதி மக்களுக்கு உயர் தர சிகிச்சை கிடைக்கபெறுவதற்க்கு அம்மாவின் அரசு உருவாக்கி தந்துள்ளது.உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு 1.5 கோடி ரூபாய்க்கு செயலபடுத்த்பட்டிருக்கிறது.அதே போல மகப்பேறு மருத்துவமனை 14 கோடியில் கட்டபட்டு வருகிறது.சுகாதார துறையின் பல்வேறு புதிய கட்டிடங்கள் 3.5 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.இதனையெல்லாம் அம்மாவின் அரசு இப்பகுதி மக்களுக்கு செயல்படுத்தபட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 1.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவபட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்க்கு வெகு விரைவில் எம் ஆர் ஐ ஸ்கேன் நிறுவபடவுள்ளது.தனியார் மருத்துவமனையில் இருக்கும் மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனையில் நிறுவபட்டு ஏழைமக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
110 விதியுன் கீழ் சட்டபேரவையில் அறிவித்த அறிவிப்பின் படி ஏழை எளிய மக்கள் அரசை நாடி செல்வதை காட்டிலும் அரசு நேரடியாக மக்களுக்கு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்வு கூட்டம் என்ற கூட்டத்தை 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் தான் அறிவித்ததாகவும் .அதன் படி எல்லா மாவட்டத்திலும் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் ஏற்படுத்தபட்டது.அத்திட்டத்தின் வாயிலாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 54137 மனுக்கள் பெறபட்டு 15425 மனுக்களுக்கு தீர்வு காணபட்டுள்ளது.2019;ல்-20 4521 இலவச வீட்டுமனை பட்டாக்கள் இம்மாவட்டத்தில் வழங்கபட்டுள்ளது.கல்வராயன்மலை யை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகாவாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.பொதுபணித் துறையின் மூலமாக 2020-21 ஆம் ஆண்டு 23 பணிகள் 12 கோடி ரூபாயில் மேற்கொள்ளா அதில் 60% பணிகள் முடிவு பெற்றது.
கடந்த 4 ஆண்டுகளில் 50 பணிகள் எடுத்து கொள்ளபட்டு இதுவரை 16 பணிகள் முடிவு பெற்றுள்ளது.குடிமராமத்து திட்டம் என்ற திட்டத்தை அரசு சிறபாக செயல்படுத்தி வருகிறது.இத்திட்டமான முழுக்க முழுக்க விவசாயீகளுக்கான திட்டமாக உள்ளது.இதனால் ஏரிகள் குளங்கள் குட்டைகள் எல்லாம் தூர்வாரபடுகிறது.பொது பணிதுறைக்கு கீழ் வருகின்ற ஏரிகளின் எண்ணிக்கை 14 ஆயிரம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வருகின்ற எண்ணிக்கை 26 ஆயிரம் என மொத்தம் தமிழகத்தில் 40 ஆயிரம் ஏரிகள் உள்ளது.பெரிய ஏரிகள் மூலம் குளம் ,குட்டைகள் வரையில் நிதி ஒதுக்கீடு செய்து பொதுமக்களின் பங்களிப்போடு இத்திட்டதை நிறைவேற்றி கொண்டிருப்பதாக முதல்வர் பேசினார்.. மேலும் இத்திட்டத்தின் மூலம் கரை பலபடுத்துதல் மழை நீர் சேமித்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்வதால் கூடுதலாக நீர் சேருகிறது.எனவே இத்திட்டம் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளது.எனவே இது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.தடுப்பனை கட்டுவது, அதிகரிக்கபட்டு நீர் வீணாக செல்லுவதை தவிர்க்கும் வகையில் தடுப்பணைகள் கட்டபட்டு பருவ காலத்தில் பெய்து வரும் மழை நீர் சேமிக்கபட்டு பிறகு வேளாண் பயிர்களுக்கு சென்றடைகிறது.
முக்தா ஆற்றின் குறுக்கே எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 1.9 கோடி மதிப்பீட்டில் தடுப்பனை கட்டும் பணி நடைபெற்று நிறைவு செய்யபட்டது. அதே போல மதகுகள் வாய்க்கால்கள்,கரைகள் பலபடுத்தும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து இதுவரையில் 27000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற ஏற்படுத்தியுள்ளோம் .கோமுகி, மணிமுத்தா ,வசிஷ்டா மற்றும் கெடிலம் ஆகிய ஆறுகளின் வழியே 43 கோடி மதிப்பீட்டில் 9 தடுப்பனைகள் கட்ட மதீப்பீடாகியுள்ளது.மணிமுக்தா அணையின் புணரமைப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்து 4270 ஏக்கர் நீர் பாசன பணிகள் முடிக்கபட்டு அதன் மதிப்பு 22 கோடி ரூபாய் எனவும் ..இவையேல்லாம் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் அரசு மேம்படுத்தி நீர் நிலைகளை காத்து வருகிறது.அதே போல நெடுஞ்சாலை துறையின் சார்பில் கள்ளக்குறிச்சி யில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்று சாலை அமைக்க விரிவான திட்டபணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
உளுந்தூர்பேட்டை யில் 35 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்தபட்டுள்ளது.இதனால் 26000 மக்கள் பயன் பெறுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்
4666 சுய உதவி குழுக்களில் 81000 ஆயிரம் பேர் உள்ளதாகவும் .தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 570 ககோடி ரூபாய் கடனுதவி வழங்கபட்டுள்ளது.2019-20 240 கோடி கடனுதவி இலக்கு நிர்ணயிக்கபட்டு 243 .66 கடனுதவி கொடுக்கபட்டுள்ளது.20-21 340 கோடி ரூபாய் கடன் கொடுக்க இலக்கு நிர்ணையிக்கபட்டுள்ளது எனவும் பேசினார்..
இதுவரையில் 24700 பேருக்கி 63.7 கோடி ரூபாய் கடனுவி மாவட்டத்தில் வழங்கபட்டுள்ளது. தமிழகத்தில் அதிகமாக சுய உதவி குழுக்களுக்குதான் கடன வழங்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மகளிர் சுயமாக தொழில் துவங்கவேண்டும் என்ற எண்ணித்தில் இவ்வரசு செயல்படுத்தி வருகிறது.அவர்களுக்கு இரு சக்கர வாகனம் என இதுவரையில் 3 ஆண்டுகளில் 2974 பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்க மானியம் கொடுக்கபட்டுள்ளது எனவும் முக கவசம் அனைத்து குடும்பங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய்பட்டுள்ளது ஒவ்வொருவரும் தலா இரண்டு வங்க அரசு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.அதே போல விவசாயீகளுக்கு நிண்ணுயிர் பாசனத்திற்க்கு நிதி ஒதுகீடு செய்யபட்டுள்ளது.இந்தியாவிலேயே தமிழத்திற்க்கு தான் அதிக தொகை விவசாயீகளுக்கு நுண்ணுயிர் பாசன வசதிக்காக வாங்கி கொடுக்கபட்டுள்ளது.மாவட்டத்தில் பள்ளி கல்வி துறையின் சார்பில் பல்வேறு பள்ளிகள் தரம் உயர்த்தபட்டுள்ளது .அதில் ரிஷிவிந்தியம் தொகுதியில் கலை மற்று அரசு கல்லூரி துவக்கபடவுள்ளது.தொழில்ப்துறை களில் 3995 தொழில் நிறுவனங்கள் செயல்பட்டுவருகிறது.அதிலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயீகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.அவர்களின் நலனில் அரசு அக்கரை கொண்டு பல்வேறு தொழிற்பேட்டைகள் உருவாக்க பட்டுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...
- Advertisement -

More Articles Like This