கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
இதனால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,802 ஆக உள்ளது. இதில், 10,679 பேர் குணமடைந்துள்ளனர். 108 பேர்இறந்துள்ளனர். மீதமுள்ள 15 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.