கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ,சங்கராபுரம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை போன்ற பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது . கல்வராயன்மலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கல்வராயன்மலையில் உள்ள பல்வேறு நீர் வீழ்ச்சிகளில் நீர் வரத்து துவங்கியுள்ளது.அதில் குறிப்பாக சுற்றுலா பயணிகள் எளிதில் செல்லும் வகையில் இருக்கும் பெரியார் நீர் வீழ்ச்சியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது .இதனால் பெரியார் அருவியில் செந்நிர நீர் அருவியின் தடுப்பை விட்டு வெளியே நீர் அதிகளவில் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது .மேலும் பெரியார் அருவியின் உள் பகுதிகள் கட்டைகள் வைத்து அடைக்கபட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்காத வகையில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக ஏற்படுத்தபட்டுள்ளது.,மேலும் பெரியார் நீர் வீழ்ச்சியில் இருந்து வாரும் மழை நீரானது கல்வராயன்மலையின் அடிவாரத்தில் உள்ள கோமுகி அணைக்கு செல்வதால் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது..