26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

கணவரை கொலை செய்து காப்பு காட்டில் வீசிய மனைவி உட்பட இருவர் கைது !

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையம் அருகே அடர்ந்த வனப் பகுதியாக உள்ளது கல்வராயன் மலை .கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் தர்மபுரி மாவட்டத்திற்கும் எல்லையான கல்வராயன்மலை பகுதியில் கடந்த 7 ஆம் தேதியன்று 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.இது குறித்து கரியாலூர் போலிசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் நேரில் சென்று கொலை செய்யப்பட்ட நபர் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் .,மேலும் கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர் .அப்போது அவர் கல்வராயன் மலை கீழாத்து குழி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான தேவராஜ் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவருடைய மனைவி உறவினர்கள் நண்பர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர் அப்போது அவருடைய மனைவி புஷ்பா போலிசாரிடம் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தும் தனது கணவரை காணவில்லை என தேடி அழுவதாக நாடகமாடியுள்ளார்.இதனை அறிந்த போலிசார் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது.அவரை காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் விசாரணையில் தனது கள்ளக்காதலன் மணி மற்றும் அவருடைய உறவினர் சுரேஷ் ஆகிய இருவருடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் போலீசாரிடம் மனைவி அளித்த வாக்குமூலத்தில் நானும் எனது கணவரும் கர்நாடக மாநிலம் மைசூரில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்த போது அங்கு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள கீரக்கரை கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் மணி என்பவருடன்ம் பழக்கம் ஏற்பட்டது .நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது இதனால் அடிக்கடி நாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம் இந்த நிலையில் ஒரு நாள் நாங்கள் தனிமையில் இருந்தது எனது கணவர் பார்த்து விட்டார் அதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை மணி உடனான தொடர்பை கைவிடுமாறு கண்டித்தார் இருப்பினும் நான் மணியுடன் தொடர்பில் இருந்து வந்தேன் இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நாங்கள் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டோம் இதையடுத்து மணியும் அவ்வப்போது வீட்டுக்கு வந்து என்னை சந்தித்து பேசி சென்றார் இதுபற்றி அறிந்த தேவராஜ் தினமும் மது குடித்துவிட்டு வந்து என்னை துன்புறுத்தி வந்தார் இது குறித்து நான் மணியிடம் கூறியதோடு அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினோம் கடந்த 2ம் தேதி அன்று கணவர் வீட்டுக்கு வந்த பின்பு மணியையும் வீட்டிற்கு வருமாறு கூறினேன் இதையடுத்து மணி அவருடைய உறவினரான அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் எனது வீட்டுக்கு வந்தார் பின்னர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தேவராஜன் சேலையால் கழுத்தை நெரித்து கொன்றோம் அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் மணி வந்த மோட்டார் சைக்கிளில் அவரை தூக்கிக் கொண்டு மேல்நிலவூர் ல் உள்ள அடர்ந்த ஒரு காட்டுப்பகுதியில் கைகட்டி போட்டோம். பின்னர் அங்கிருந்த பள்ளத்தில் உடலை தள்ளி விட்டு அதில் கருங்கற்களால் மூடிவிட்டு சென்றோம் இவ்வாறு புஷ்ப வாக்குமூலத்தில் கூறியுள்ளார் இதையடுத்து போலீசார் மனைவி புஷ்பா மற்றும் மணி ஆகிய 2 பேரை கைது செய்தனர் மேலும் தலைமறைவாக உள்ள சுரேசை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் போலீசார் பறிமுதல் செய்தனர்

Murder News 18.07.2020
Murder News 18.07.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This