கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள எரவார் கிராமத்தில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் புகுந்து கொள்ளை.அக்கிராமத்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் வராண்டாவில் படுத்திருந்துள்ளார்.இந்த நிலையில் வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் பிரோவில் வைத்திருந்த 4 லட்சம் ரூபாய் பணத்தையும் 12 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டனர் அதே போல வாசலில் உறங்கி கொண்டிருந்த கிருஷ்ணாமூர்த்தியின் மனைவியின் கழுத்தில் இருந்த தாலி கொடியையும் பறித்து சென்றுள்ளனர்.இதனை அறிந்த மனைவி கத்தி கூச்சலிட கொள்ளையர்கள் பின் பக்க கதவு வழியாக தப்பி சென்று விட்டனர்.அதே போல கிருஷ்ணமூர்த்தி விட்டின் பின் பக்க தெருவில் வசித்து வரும் பானுமதி என்பவர் தனது வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று உறங்கி கொண்டிருந்த போது அவரின் வீட்டை பூட்டை உடைத்து வீட்டில் இருந்த வெள்ளி ,கொலுசு மெட்டி மற்றும் பணம் மற்றும் அவரது மகளின் பள்ளி சீருடை ஆகியவற்றை கொள்ளை யடித்தனர்.அதே போல பானுமதி வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்த போது அக்கம் பக்கத்தினர் சுதாரித்து கொண்டதால் கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர்.ஒரே கிராமத்தில் தொடர்ந்து மூன்று வீடுகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறியதால் கிராமத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.இது குறித்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் பானுமதி ஆகியோர் சின்ன சேலத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.மேலும் சமபவ இடத்திற்க்கு சென்று போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
Updated:
ஒரே கிராமத்தில் அடுத்ததுடுத்த மூன்று வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் !
Must Read
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்
ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
...
சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
...
- Advertisement -
Latest News
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -
More Articles Like This
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...
கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று இல்லை!!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று...