ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும்”- முதல்வர் பழனிசாமி!!

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

AIADMK-will-build-houses-for-the-homeless-poor-people-says-Tamil-Nadu-Chief-Minister-Edappadi-K-Palaniswami

சென்னை அசோக்நகரில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் அவர் உரையாற்றினார். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய முதல்வர் பழனிசாமி, கொரோனா பரவலை திறம்பட எதிர்கொண்டதாக பெருமிதம் தெரிவித்தார்.

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர் எனக் கூறிய அவர், ஏழை மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்போம் என உறுதி அளித்தார்.