26.5 C
Kallakkurichi
Wednesday, March 3, 2021

ஏரியில் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தார் நமது ஆட்சியர்.

Must Read

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...

சுமுகமாக முடிந்தது தொகுதி பங்கீடு பேச்சு :கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்            ...

வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட அ.தி.மு.க.  திட்டம் …

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.                ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே காரனூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரி தூர்ந்து போனதோடு, மதகுகளும் சேதமடைந்தது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைக்கமுடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று பெரிய ஏரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமை தாங்கி குடிமராமத்து பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஏரியை தூர்வாரி மதகுகளை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரபு எம்.எல்.ஏ., தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைய தலைவர் ராஜசேகர், சின்னசேலம் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ராஜேந்திரன், காரனூர் ஏரி பாசன சங்க தலைவரு

Lake 29.05.2020
Lake 29.05.2020

ம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான ராமச்சந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரபு, கணேசன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஏ.ஆர்.கே.சரவன்னுடன் இணையும் அதர்வா!!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.          ...
- Advertisement -

More Articles Like This