26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா.

Must Read

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...

ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்    ...

ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம் !!

எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.    ...

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் கூடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கிராம மக்கள் திரண்டு தடையை மீறி மீன்பிடி திருவிழா நடத்தி உள்ளனர். அதாவது, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றத்தில் பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரியில் தற்போது தண்ணீர் வற்றிவிட்டது. அதனால் அப்பகுதி மக்கள் ஏரியில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.

Maxresdefault (1)
Maxresdefault (1)

இதையொட்டி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் நேற்று அந்த ஏரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் வலைகளைக் கொண்டும், கைகளால் துளாவியும் ஏரியில் இறங்கி போட்டி போட்டு ரகம், ரகமான மீன்களை பிடித்தனர். குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவிலான மீன்களை அள்ளினர். கெண்டை, கெளுத்தி, கட்லா, விரால், கொரவை உள்ளிட்ட ரக மீன்கள் அதிகளவில் பிடிபட்டன. இந்நிலையில் ஊரடங்கை மீறி நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழா குறித்து அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...
- Advertisement -

More Articles Like This