கள்ளக்குறிச்சியில் கொரோனா ஊரடங்கிலிருந்து தளர்வு ஏற்படுத்தி பல்வேறு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சாலைகளில் அமைக்கப்பட்ட தடைகள் அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சியில் ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்தை குறைக்கும் வகையில் முக்கிய சாலைகள், தெருக்களில் தடுப்பு கட்டைகள் மூலம் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் நடமாட்டம் குறைக்கப்பட்டது.இந்நிலையில், தமிழக அரசு நேற்று முதல் ஊரடங்கிற்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு 34 வகையான கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இதனால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக முற்றிலுமாக முடங்கிப் போயிருந்த கள்ளக்குறிச்சி நகரம் தற்போது முழுவீச்சில் இயங்க துவங்கியது. ஆனால் முக்கிய சாலைகள், தெருக்களின் சந்திப்புகள் அனைத்தும் தடுப்புகட்டைகளால் அடைபட்ட நிலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.அத்துடன் நகரப்பகுதியில் கொரோனா தொற்று யாருக்கும் இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருந்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடைகளையும் முற்றிலும் அகற்றி போக்குவரத்து சீரமைக்க மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Updated:
ஊரடங்கிலிருந்து கடைகளுக்கு அனுமதியளித்தும்அகற்றப்படாத சாலை தடுப்புகளால் மக்கள் அவதி
Must Read
வயிற்று வலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை …
ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
...
6 பேர் குண்டர் சட்டத்தில் கைது …
தஞ்சை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், குண்டர் சட்டத்தில் 6 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
...
காவல் நிலையம் அருகிலே வாலிபர் வெட்டிக் கொலை …
மானாமதுரையில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரமாக நடந்த கொலை சம்பவம் பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
...
- Advertisement -
Latest News
வயிற்று வலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை …
ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
...
- Advertisement -
More Articles Like This
தேமுதிக தனித்து நிற்க்கும் ! பிரேமலதா பேட்டி….
தேமுதிக தனித்து நின்றது… இப்போதும் என்னை பொருத்தமட்டில் தனித்து நின்று போட்டியிட தயாராக உள்ளது என பேச்சு !
விரைவில் நல்ல செய்தி வரும் என பேட்டி!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி உள்ள தனியார்...
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...