26.5 C
Kallakkurichi
Saturday, February 27, 2021

ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்கலாம்

Must Read

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...

பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.            ...

சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.                ...

தமிழகத்தில் நாளை முதல் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தடுப்பு பணிகளை அரசு தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் 24-3-2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. நோய்த்தொற்று குறையக் குறைய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
தற்போது, முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19-5-2020 அன்று முதல் இயங்குவதற்கு உத்தரவிட்டுள்ளேன்.இந்த முடி திருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், கையுறை அணிந்து முடிதிருத்துமாறும், முக கவசங்களை அணிவதை உறுதி செய்யுமாறும், கடையின் உரிமையாளர் முடிதிருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும், அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கான விரிவான வழிமுறைகளை அரசு தனியாக வழங்கும்.

சலூன் செய்திகள் 18.05.2020
சலூன் செய்திகள் 18.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -

More Articles Like This