26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

இருசக்கர வாகனம் வாங்க கொடுத்த பணத்தை கேட்ட வாலிபர் கழுத்தறுத்து கொலை

Must Read

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...

ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்    ...

ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம் !!

எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.    ...

கள்ள காதலுக்காக கொலை ,நிலபிரச்சனைக்காக கொலை ,பணதகராறுகாக கொலை என பல சம்பவங்கள் நடந்தாலும் ஆசை பட்டதை வாங்க முயன்ற இளைஞரை கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்றுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த ரெட்டியார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் மனோஜ் இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் மரூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த டேனியல் மகன் ஸ்டீபன் என்பவருக்கும் பகண்டை கூட்ரோடு சாலையில் சந்திக்கும்போது நட்பு ஏற்பட்டுள்ளது .ஸ்டீபன் கார் டிரைவராக உள்ளார். இந்த நிலையில் மனோஜ் தனக்கு பைக் வாங்கித் தருமாறு எட்டாயிரம் ரூபாய் பணத்தை ஸ்டீபன் இடம் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கொடுத்துள்ளார் ஆனால் பைக் வாங்கித் தராமல் ஸ்டீபன் மனோஜை அலை கழித்துள்ளார். இதுபற்றி அறிந்த மனோஜின் பெற்றோர் பைக் வாங்க முடியாவிட்டால் பணத்தை வாங்கிக்கொண்டு வா என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து ஸ்டீபனை போனில் தொடர்பு கொண்டு என் வீட்டில் திட்டுகின்றனர் ஒன்று பணத்தை கொடு இல்லையென்றால் பைக் வாங்கி கொடு என்று ஸ்டீபனிடம் கேட்டுள்ளார் .அப்போது சனிக்கிழமை திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி பகுதிக்கு வா என்று ஸ்டீபன் போனில் மனோஜிடம் கூறியுள்ளார்.அங்கு வந்துள்ள மனோஜை அழைத்து கொண்டு இருவரும் அங்கு உள்ள வனப்பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த வன காவலர் இங்கு மது குடிக்க கூடாது என எச்சரித்து விட்டுச் சென்றுள்ளார். இதனிடையே போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்டீபன் மனோஜின் கழுத்தை நெரித்து கல்லால் தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு ஓடிவிட்டார். இதனிடையே இரவு வெகுநேரமாகியும் மனோஜ் வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர் ஸ்டீபனுக்கு போன் செய்து மனோஜ் குறித்து கேட்டுள்ளனர்.அப்போது தான் அவனை சந்தித்து விட்டு வீட்டிற்கு திரும்பிவிட்டதாக கூறியுள்ளார்.இருப்பினும் பெற்றோர்களிடத்தில் மனோஜ் தீபனை பார்க்க செல்வதாக தெரிவித்து விட்டு சென்று உள்ளதாக கூறினார் என ஸ்டீபனிடம் சொல்ல .ஸ்டீபன் என்னை பார்த்து விட்டு சென்றுவிட்டார் என கூறி போனை கட் செய்துள்ளானர் .இதனால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இடையே ஸ்டீபன் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் மனோஜ் இன் பெற்றோர்கள் ஸ்டீபனின் வீட்டிற்கு சென்று நேரில் அழைத்து தன்னை பார்க்க தான் மனோஜ் வந்துள்ளார் எங்கே அவர் என கேட்டதற்கு ஒன்றும் தெரியாதது போல மனோஜ் தன்னை பார்க்க வந்ததாகவும் தான் அவனிடம் பேசி அனுப்பி விட்டதாகவும் ஸ்டீபன் கூறியுள்ளார். அதன்பிறகு மனோஜ் இன் பெற்றோருடன் சேர்ந்து இரவு முழுவதும் மனோஜை தேடும் பணியில் இருந்துள்ளார் ஸ்டீபன். பிறகு பெற்றோர்கள் திருபால பந்தல் போலிசாரிடம் புகார் அளித்தநர்.அப்போது கடைசியாக மனோஜ் ஸ்டீபனை பார்க்க தான் சென்றான் என பெற்றோர்கள் போலிசாரிடம் கூற போலீசாருக்கு ஸ்டீபன் மீது எழுந்த சந்தேகத்தின் காரணமாக ஸ்டீபனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதலில் முன்னுக்குப் பின்னாக பதில் அளித்து வந்த ஸ்டீபன், மனோஜ் ஐ தான் குடிபோதையில் கொலை செய்து விட்டதாகவும் அவரை மாடாம் பூண்டியில் உள்ள தைல மரக் காட்டில் போட்டுவிட்டு தான் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார் .மேலும் போலீசார் ஸ்டீபன் அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது இதுகுறித்து மனோஜின் உறவினர்களுக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் மற்றும் போலீசார் மனோஜின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு திருக்கோவிலூர் டிஎஸ்பி மகேஷ் ஆய்வு செய்து கொலை நடந்த இடங்கள் மற்றும் கொலை செய்யப்பட்டதற் காண காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டார் அப்போது மனோஜ் தனது இருசக்கர வாகனம் வேண்டும் என்றும் அதனை வாங்கித் தருவதற்கு தன்னிடம் 8000 ரூபாய் பணம் கொடுத்ததாகவும் அதனை திருப்பிக் கேட்டு தன்னை அலைபேசியில் தொடர்பு கொண்டதாகும் பணம் தர முடியாத காரணத்தினால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் குடிபோதையில் தான் அடித்துக் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு இளைஞர் படுகொலை செய்த சம்பவம் மாடாம்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் ஸ்டீபன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்

Murder 20.07.2020
Murder 20.07.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.        ...
- Advertisement -

More Articles Like This