26.5 C
Kallakkurichi
Friday, March 5, 2021

இந்தியாவில் தினசரி 95 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்கிற அளவுக்கு திறன் அதிகரித்துள்ளது என மத்திய மந்திரி ஹர்சவர்தன்

Must Read

வயிற்று வலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை …

ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.            ...

6 பேர் குண்டர் சட்டத்தில் கைது …

தஞ்சை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், குண்டர் சட்டத்தில் 6 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.      ...

காவல் நிலையம் அருகிலே வாலிபர் வெட்டிக் கொலை …

மானாமதுரையில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரமாக நடந்த கொலை சம்பவம் பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.      ...
வட கிழக்கு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் எப்படி இருக்கிறது, தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை உயர்மட்ட கூட்டம் நடத்தி டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் நேற்று ஆய்வு செய்தார்.
அவர் கொரோனா வைரசுக்கு எதிரான போரில், அசாம், அருணாசலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் பங்களிப்பை பாராட்டினார்.

வட கிழக்கு மாநிலங்களில் பெரும்பாலானவற்றில் பச்சை மண்டலங்களை பார்க்கிறபோது அது மிகப்பெரிய ஆறுதலாகவும், ஊக்கம் தருவதாகவும் அமைந்துள்ளது. அசாமிலும், திரிபுராவிலும்தான் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுகின்றனர். பிற மாநிலங்கள் பச்சை மண்டலத்தில் உள்ளன. ஆரஞ்சு மண்டலங்களை நாம் பச்சை மண்டலங்களாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
நமது நாட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை வசதியானது, தினசரி 95 ஆயிரம் பேருக்கு செய்யத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 332 அரசு மற்றும் 121 தனியார் ஆய்வுக்கூடங்கள் இதை மேற்கொள்கின்றன. இதுவரை கொரோனா வைரஸ் பரிசோதனை 15 லட்சத்து 25 ஆயிரத்து 631 பேருக்கு நடத்தப்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் தற்போதைய சாதகமான நிலையை தக்க வைத்துக்கொள்வதற்கு, இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், வெளிநாட்டில் இருந்து திரும்புவோர் விதிமுறைகளின்படி தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பொது இடங்களில் எச்சில் துப்புவதையும், புகையிலை மெல்லுவதையும் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

Rapid Test 10.05.2020
Rapid Test 10.05.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

வயிற்று வலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை …

ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.            ...
- Advertisement -

More Articles Like This