ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு ! – முதல்வர் பழனிசாமி
தியாகதுருகம் அருகே உள்ள குடியநல்லுாரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட கடந்த ஆண்டு 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய கட்டடத்திற்கான பணிகள் துவங்கி முடிவடைந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதையடுத்து, குடியநல்லுார் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையத்தில் பிரபு எம்.எல்.ஏ., குத்து விளக்கேற்றியும் இனிப்புகளையும் வழங்கினார்.கள்ளக்குறிச்சி சுகாதாரத்துறை துணை இயக்குனர் சதீஷ்குமார், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.