கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்வி துறையின் சார்பில் 2019-20 ஆண்டிற்கான ராதா கிருஷ்ணன் விருதினை ஒவ்வொரு மாவட்டத்திலும் வழங்கபட்டு வந்தது. இதனை ஆசிரியர் தினத்தன்று வழங்கபட்டு வருவது வழக்கமாக இருந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வி துறையின் சார்பில் விருதுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி காலதாமதமாக ஆனது இந்த நிலையில் மாவட்டத்தில் பணியாற்றும் 8 ஆசிரியர்களை தேர்வி செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்க ஏற்பாடு செய்யபட்டது.இதனை சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் துறை அமைச்சர் சி வி சண்முகம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில் ஆசிரியர்களுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் .இதில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு ,உளுந்தூர் பேட்டை எம் எல் ஏ குமரகுரு மற்றும் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டார்கள் ..