அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் , இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளிலும் அதிக அளவு கொரோனா பாதிப்பு …

உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.35 கோடியாக உயர்வு

                                                     கொரோனா வைரஸ்

 

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி படாத பாடு படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் ஒருவகையான உருமாற்றமும், இங்கிலாந்தில் மற்றொரு வகையான உருமாற்றமும் பெற்ற கொரோனா உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் உள்பட பல நாடுகளில் கடும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இங்கிலாந்தில் ஏற்பட்ட உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வெளி நாடுகளில் வேகமாக பரவியபடி உள்ளது.

50-க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய வகை உருமாற்றம் பெற்ற கொரோனா பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது. எனவே விமான பயணங்களின் போது அனைத்து நாட்டு மக்களுக்கும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 35 லட்சத்து 9 ஆயிரத்து 890 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டி உள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒரே நாளில் 4 ஆயிரத்து 69 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் , இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளிலும் அதிகஅளவு கொரோனா பாதிப்பு காணப்படுகிறது.