அனுமன் ஜெயந்தியை கடுமையாக எதிர்க்கிறேன் : முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா !!

முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார்: சித்தராமையா

                                                            சித்தராமையா
மைசூரு பல்கலைக்கழகம் சார்பில் மானச கங்கோத்ரி வளாகத்தில் கனகதாசர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சித்தராமையா பேசுகையில் கூறியதாவது:-
அனுமன் ஜெயந்தி எப்போது கொண்டாடப்படுகிறது என்பது எனக்கு தெரியாது. அதற்கு வரலாறு இல்லை. யாரோ எப்போதோ அனுமன் ஜெயந்திக்கு ஒரு தேதியை குறித்தனர். அதையே தற்போதும் கடைப்பிடித்து வருகின்றனர். பசுவதை தடை சட்டத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இதற்கு காரணம் விவசாயிகள் மீதான அக்கறை தான். மாட்டிறைச்சி சாப்பிடுவது மக்களின் விருப்பம்.
உணவு சாப்பிடும் உரிமையை பறிக்க பா.ஜனதாவினர் யார்? வயதான மாடுகளை வைத்து கொண்டு விவசாயிகள் என்ன செய்வார்கள். அந்த மாடுகளை அரசு வாங்கி கொண்டு அதற்கு உரிய விலையை கொடுக்கட்டும். அதற்கு பிறகு மாடுகளை என்ன வேண்டும் என்றாலும் செய்யட்டும். மாட்டின் தோல்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கிடைக்கிறது.
அதுவும் தற்போதும் தடைப்படும். வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் மாநிலத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவார். எடியூரப்பாவுக்கு பதிலாக வேறு ஒருவர் முதல்-மந்திரியாக நியமனம் செய்யப்படுவார்.