மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்லாமல் அதிமுகவை விமர்சிப்பதற்காகவே திமுக கிராம சபை கூட்டங்கள் நடத்துகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழக சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் இன்று காலை கோவை கோனியம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து கோவையில் அவர் பிரசாரத்தை தொடங்கினார். பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: