இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் காபா மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக விளையாடி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன். இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் போட்டியின் ஆரம்பம் முதலே அசத்தலாக பந்துவீசி ஆத்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு இம்சை கொடுத்தார்.
அவரது பந்தில் ரன்கள் குவிக்கவே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். நல்ல லெந்த்களில் நடராஜன் வீசிக் கொண்டே இருந்தார். அதன் பலனாக 64வது ஓவரில் மேத்யூ வேடை 45 ரன்களில் அவுட் செய்தார். அடுத்த ஓவரிலேயே சதம் கடந்து விளையாடிக் கொண்டிருந்த லபுஷேனையும் நடராஜன் அவுட் செய்தார்.
Another wicket for T Natarajan and this time he’s claimed the prized scalp of Marnus Labuschagne who falls for 108! #AUSvIND | #WTC21 pic.twitter.com/IEd93JKFtg — ICC (@ICC) January 15, 2021
“அற்புதமான பந்துவீச்சு. இந்த விக்கெட்டுகளை வீழ்த்த அவர் உழைத்துள்ளார்” என போட்டியின் வர்ணனையாளர்கள் நடராஜனின் விக்கெட் வேட்டையை புகழ்ந்தனர். மொத்தமாக 17 ஓவர்களை வீசியுள்ள நடராஜன் 42 ரன்களை கொடுத்துள்ளார். அதோடு இரண்டு மெய்டன் ஓவர்களும் இதில் அடங்கும்.