அசத்தல் வைபை ரவுட்டர் வழங்கும் ஏர்டெல்!!

பிராட்பேண்ட் பயனர்களுக்கு அசத்தல் வைபை ரவுட்டர் வழங்கும் ஏர்டெல்

ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பைபர் வாடிக்கையாளர்களில் ரூ. 3999 சலுகையை தேர்வு செய்வோருக்கு நொடிக்கு 1 ஜிபி வேகம் வழங்கும் 4×4 வைபை ரவுட்டர் வழங்கப்படுகிறது. சமயங்களில் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் ரவுட்டர்கள் ஜிகாபிட் தர இணைய அனுபவத்தை வழங்குவதில்லை.
இதை கருத்தில் கொண்டு ஏர்டெல் தனது பைபர் சலுகையுடன் இலவச ரவுட்டர் வழங்குகிறது. ரூ. 3999 எக்ஸ்-ஸ்டிரீம் பைபர் சலுகையில் நொடிக்கு 1 ஜிபி வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பைபர் ரூ. 3999 சலுகையை தேர்வும் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 1 Gbps 4×4 வைபை ரவுட்டர் வழங்கப்படும். இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நொடிக்கு 1 ஜிபி இணைய வேகத்தை அனுபவிக்க முடியும். சீரான அதிவேக இணைய வசதி ஆன்லைன் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும்.
 கோப்புப்படம்
இந்த சலுகையில் அன்லிமிடெட் இணைய வசதி மட்டுமின்றி அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையும் வழங்கப்படுகிறது. இத்துடன் வழங்கும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் வழங்கும் 550 தொலைகாட்சி சேனல்களை பார்க்கும் வசதி, ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஆப் லைப்ரரியின் ஒடிடி தரவுகளை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.
ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஆப் லைப்ரரியில் 10 ஆயிரத்திற்கும் அதிக திரைப்படங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இத்துடன் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.